search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷியா போர்"

    • உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடந்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைனில் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். டிரோன் தாக்குதலில் 18 வீடுகள் சேதமடைந் தன.

    இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தாமதப்படுத்துவதாகவும், ஆயுதங்களை விரைவாக வழங்கி இருந்தால் ரஷிய டிரோன் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

    • ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
    • உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 2 ஆண்டு முடிந்து, மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனின் வெற்றி மேற்கத்திய நாடுகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது. உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும்.

    ரஷியாவுடனான 2 ஆண்டு போரில் 31,000 உக்ரைன் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ஆனால் ரஷிய அதிபர் புதினோ, ஒன்றரை முதல் 3 லட்சம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக பொய் சொல்லி வருகிறார். எங்கள் வீரர்களின் இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினுடன் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களால் காது கேளாத நபருடன் பேசமுடியுமா? எதிரிகளைக் கொல்லும் ஒரு மனிதனுடன் பேசமுடியுமா? அவர் 2030-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். நாங்கள் விரைவில் வீழ்த்த விரும்புகிறோம் என்றார்.

    • உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
    • நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

    இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.


    உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.

    இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

    நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    • ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது.
    • ரஷியாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவின் உளவு-விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை கூறும்போது, அசோவ் கடலில் ரஷியாவின் ஏ-50 யூ உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இது ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து ரஷியா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    சமீபத்தில் ரஷியாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

    ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷியாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷிய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கிறது.
    • ரஷியா மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்த நிலையிலும், போரில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷியா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என்றார்.

    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • ரஷிய ராணுவம் சமீபகாலமாக உக்ரைன் மீது தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
    • பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இதற்கிடையே சமீபத்தில் ரஷியா ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் பெல்கரோட் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியது.
    • கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

    லண்டன்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் விளாடிமிர் புதினை வெற்றி பெற விடமாட்டோம். உக்ரைனுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்தார்.

    • பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

    இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன

    இந்நிலையில், நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன.

    இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியா படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷியாவின் 87 ஏவுகணைகள், 27 டிரோன்களை உக்ரைன் படைகள் இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிந்தது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

    மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, உக்ரைனின் விமானப்படைத் தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரைனிய விமானிகள் ரஷிய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்தனர். ரஷியாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.
    • ரஷியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

    மாஸ்கோ:

    ரஷியா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷியா ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.

    உக்ரைனுக்குள் புகுந்த ரஷிய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷியாவால் பணிய வைக்க இயலவில்லை. உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.


    இதன் காரணமாக ரஷியாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

    இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக ரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

    உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

    ×